நெல்லை : 29-2025 துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை கிழக்கு மாவட்ட திமுக விவசாய அணி சார்பில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 27 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை கிழக்கு மாவட்ட திமுக விவசாய அணி சார்பில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 27 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

துணை முதல்வரும், மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை கிழக்கு மாவட்ட திமுக விவசாய அணி மாவட்ட தலைவர் இ.நடராஜன் ஏற்பாட்டில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 27 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அப்துல்வகாப் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அணிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் ராஜூ, பகுதி செயலாளர் துபாய் சாகுல், மாநகராட்சி மண்டல தலைவர்கள் கதீஜா, மகேஸ்வரி, மாமன்ற உறுப்பினர்கள் கந்தன், சகாயசூலியட்மேரி , மருத்துவக்கல்லூரி முதல்வர் ரேவதிபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.








