இலங்கையில் புயலின் கோர முகம்; 69 பேர் பலி ! 34 பேரை காணவில்லை பேரிடர் மேலாண்மை அதிர்ச்சி தகவல்

இலங்கை; 29-2025 இலங்கையில் டிட்வா புயல் பாதிப்புக்கு ஆளான மக்களுக்கு, ஆபரேஷன் சாகர் பந்து நடவடிக்கை மூலம் இந்தியா சார்பில் நிவாரண உதவி அளிக்கப்படுகிறது.

கொழும்பு,
இலங்கையில் நவம்பர் மாத மத்தியில் இருந்தே தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த
17ம் தேதி முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் வெள்ளப்பெருக்கும் திடீர் நிலச்சரிவும் சேர்ந்து பெருமளவில் உயிரிழப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழை எதிர் வழியாக பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்து கொண்டுள்ளது.

இலங்கையில் கனமழையில் சிக்கி இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ளனர் 34 பேர் காணவில்லை; பலர் காயமடைந்துள்ளனர் என இலங்கைப் பேரிடர் மேலாண் மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் தொடரும் கனமழை காரணமாக 63 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 2.19 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 4 வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்து விட்டன. 66 வீடுகள் பகுதி அளவு சேதமடைந்துள்ளன.

பொதுமக்கள் அவசர உதவிக்கு 117 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகளை முடுக்கி விடும்படியும் மற்றும் தடையில்லா நிவாரண உதவி கிடைக்கவும் வழி செய்திடும்படி அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயகே உத்தரவிட்டு உள்ளார். மீட்பு பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்ட வருகின்றன.

புயல் பாதிப்பு மற்றும் மலை நிலச்சரிவு வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைவாசிகளுக்கு உதவிடும் வகையில் அண்டை நாடான இந்தியா உதவிக்கரம் நீட்டி உள்ளது. டிட்வா புயலுக்கு பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இலங்கையில் பேரிடரை முன்னிட்டு, இந்தியா சார்பில் ஆபரேஷன் சாகர் பந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண உதவியை இந்திய வழங்குகிறது . இது பற்றி மத்திய வெளி விவகார அமைச்சர் ஜெய்சங்கர், தனது X தள பதிவில்.. ஆப்ரேஷன் சாகர்பந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஐ.என்.எஸ். விக்ராந்த் மற்றும் ஐ.என்.எஸ். உதயகிரி ஆகிய கப்பல்கள் மூலம் கொழும்பு நகரில் நிவாரண உதவி பொருட்களை வழங்கி வருகிறோம். தொடர்ந்து நிவாரண உதவிக்கான பணிகள் நடந்து வருகின்றது என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »