சென்னையை நெருங்கும் புயல் ! தயார் நிலையில் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படைகள்…

தென்மேற்கு வங்ககடலில் உருவாகி உள்ள புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களுக்கு இன்றிலிருந்து 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. டிட்வா என பெயரிடப்பட்ட இந்த புயலின் வேகம் மணிக்கு 10 கிலோமீட்டர் என இருந்தது. தற்போது 4 கி.மீ என புயல் வேகம் குறைந்து நகர்கிறது. இதனால் இன்னும் 3 நாட்களுக்கு அதிகனமழை இருக்கும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

அதன்படி நவம்பர் 28-ம் தேதி இன்று நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யக்கூடும் என ரெட் அலர்ட் ஐ சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதே சமயம் ராமநாதபுரம், திருச்சி, சிவகங்கை, அரியலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் காரைக்காலிலும் மிக அதிகமான கன மழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு கலர் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.  

இதேபோல் ( நாளை 29 ம் தேதி ) நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆரஞ்ச் அலர்ட் மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களாக தஞ்சை அரியலூர் பெரம்பலூர் கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை வேலூர் ராணிப்பேட்டை காஞ்சிபுரம் சென்னை திருவள்ளூர் போன்ற மாவட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், இன்று மதியம் 14 மாவட்ட ஆட்சியர்கள் உடன் டிட்வா புயலை எதிர்கொள்வது குறித்து காணொளி மூலம் கலந்து ஆலோசனை நடத்தினார். அதன்படி தமிழகத்தில்

புயல் பாதிப்புகளில் இருந்து மக்களைக் காக்க 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறேன்.

16 SDRF மாநில பேரிடர் மீட்பு படைகளும், 12 தேசிய பேரிடர் மீட்பு படைகளும் கடுமையான மழைப்பொழிவு ஏற்படக்கூடிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.

அனைத்துத் துறைகளும் முறையான திட்டமிடுதலோடு ஒருங்கிணைந்து செயல்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்திட வேண்டும்! பொதுமக்கள் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையினைப் பின்பற்றி, அவசியமின்றி வெளியில் வருவதைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என முதல்வர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »