தென்காசி அருகே இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி: 6 பேர் உயிரிழப்பு, 50 பேர் காயம்.
தென்காசி : நவ. 24 –2025
தென்காசி அருகே இடைகால் துரைச்சாமிபுரம் பகுதியில் இன்று காலை இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது.தென்காசியில் இருந்து கடையநல்லூர் நோக்கி சென்ற ஒரு தனியார் பேருந்தும், கடையநல்லூரில் இருந்து தென்காசி நோக்கி வந்த மற்றொரு தனியார் பேருந்தும் இடைகால் துரைச்சாமிபுரம் பகுதியில் வந்தபோது எதிரே மோதிக்கொண்டன.

தாக்கத்தின் பலத்தில் இரண்டு பேருந்துகளும் கடுமையாக சேதமடைந்தன.இந்த விபத்தில் பஸ்களில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயங்களுடன் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் இலத்தூர் போலீஸ் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.பெரும் கோரமாக அமைந்த இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






