“கா – தி ஃபாரஸ்ட்”காட்டின் நடுவே பதுங்கியிருக்கும் அபாயம் ! திரில்லர் பட ரசிகர்களுக்கு விருந்து.

சென்னை : பிப்ரவரி 19,2026 ; வனவிலங்கு ஆய்வை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள சர்வைவல் த்ரில்லர் திரைப்படம் ‘கா – தி ஃபாரஸ்ட்’. அடர்ந்த காட்டுக்குள் ஒரு முக்கிய ஆய்வுப் பணிக்காக செல்லும் விலங்கியல் ஆராய்ச்சியாளரின் பயணம் தான் படத்தின் மையக்கரு.
காட்டின் ஆழப்பகுதிக்குள் செல்வதன் பின்னர், இயற்கையின் எதிர்பாராத சீற்றங்களும், மர்மமான மனிதர்களின் அச்சுறுத்தல்களும் அவரைச் சூழ்கின்றன. உயிர் பிழைக்க போராடும் அந்தப் பெண் ஆராய்ச்சியாளர் எவ்வாறு அந்த அபாய வளையத்திலிருந்து தப்புகிறார்? காட்டின் பின்னணியில் பதுங்கியிருக்கும் ரகசியம் என்ன? என்பதையே படம் பதட்டத்துடன் சொல்லுகிறது.

நாயகி நடிப்பு
படம் முழுவதும் நாயகி மையமாக நகர்கிறது. பயம், தனிமை, தைரியம் ஆகிய உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகளில் அவர் ஈர்க்கிறார். சண்டை மற்றும் தப்பிப்புக் காட்சிகளில் காட்டிய உடல் மொழி, கதாபாத்திரத்துக்கு பலம் சேர்க்கிறது.

இயக்கம்
காட்டை மையமாகக் கொண்ட சர்வைவல் த்ரில்லர் வகையில் படத்தை இயக்குனர் வடிவமைத்துள்ளார். முதல் பாதி சற்றே மெதுவாக நகரும் உணர்வு இருந்தாலும், இரண்டாம் பாதியில் பதட்டம் அதிகரிக்கிறது. மனிதர்கள் மற்றும் இயற்கை இடையிலான மோதலை கிளைமாக்ஸ் வலியுறுத்துகிறது.

தொழில்நுட்ப அம்சங்கள்
ஒளிப்பதிவு : அடர்ந்த காட்டின் இயற்கை அழகையும், அதே நேரத்தில் அதில் பதுங்கியிருக்கும் ஆபத்தையும் ஒளிப்பதிவு சிறப்பாக பதிவு செய்கிறது. பல காட்சிகள் நேரடியாக காட்டுக்குள் இழுத்துச் செல்லும் உணர்வை தருகின்றன.

இசை : பின்னணி இசை, பதட்டத்தையும் மர்மத்தையும் உயர்த்த உதவுகிறது. அமைதியான காட்சிகளிலும் அச்ச உணர்வை உருவாக்குகிறது.

மொத்தப் பார்வை
மெதுவான திரைக்கதை நகர்வு, ஆழமற்ற தகவல் விரிவாக்கம் போன்ற குறைகள் இருந்தாலும், காட்டை மையமாகக் கொண்ட காட்சிப் பதிவு மற்றும் நாயகியின் அர்ப்பணிப்பு படத்திற்கு பலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »