இன்டேன் கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு இடிந்து, தாய் உயிரிழப்பு: ரூ.23, 89,165/- நஷ்டஈடு வழங்க கூடுதல் நுகர்வோர் ஆணையம் அதிரடி தீர்ப்பு

திருநெல்வேலி : பிப்ரவரி – 18, 2026 ; திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகா, விக்கிரமசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த வம்பளதான் பாறை தெருவில் வசித்து வந்த முருகன் அவர்களின் மனைவி சண்முகம், 21.09.2017 அன்று வீட்டில் ஏற்பட்ட கேஸ் சிலிண்டர் வெடிப்பு விபத்தில் தீக்காயமடைந்து உயிரிழந்தார்.

வீட்டில் இருந்த Indane கேஸ் சிலிண்டரின் ரெகுலேட்டர் தானாக திறந்து கேஸ் வெளியேறிய நிலையில், அதிக மின் அழுத்தம் காரணமாக சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டமாக இடிந்து விழுந்தது.
இதில் பலத்த தீக்காயமடைந்த சண்முகம் அம்மாள், முதலில் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இச்சம்பவத்திற்கு இண்டேன் கேஸ் நிறுவனமும், அதன் டிஸ்ட்ரிபியூட்டரும், மின்சார வாரியமும் செய்த சேவை குறைபாடே காரணம் எனக் குற்றம்சாட்டி, அவரது மகன் கார்த்திக் வழக்கறிஞர் பிரம்மா மூலம் 16.08.2019 அன்று திருநெல்வேலி நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் முன்பு வழக்கு தொடர்ந்தார்.
நிர்வாக காரணங்களால் வழக்கு திருநெல்வேலி கூடுதல் நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்திற்கு மாற்றப்பட்டது.
வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் பிறவி பெருமாள் மற்றும் உறுப்பினர் சண்முகப்பிரியா, கேஸ் நிறுவனம், டிஸ்ட்ரிபியூட்டர் மற்றும் மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் ஆகியோரின் சேவை குறைபாடே சண்முகம் அம்மாள் உயிரிழப்பிற்கும், வீடு இடிந்ததற்கும் காரணம் என தீர்மானித்தனர். இதனைத் தொடர்ந்து,
ரூ.15,00,000 நஷ்டஈடு
வழக்கு தாக்கல் செய்த நாள் (16.08.2019) முதல் 9% வட்டியுடன்
வழக்கு செலவுக்கு ரூ.10,000
மொத்தம் ரூ.23,89,165/– (வட்டியுடன்) தொகையை 45 நாளுக்குள் சண்முகத்தின் வாரிசுதாரர்களுக்கு வழங்க வேண்டும் என கூடுதல் நுகர்வோர் ஆணைய உறுப்பினர்கள் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »