தீயணைப்பு துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை திடீர் சோதனை லட்சக்கணக்கில் சிக்கிய பணம் அதிகாரிகள் அதிர்ச்சி

நவம்பர் 18 – 2025; நெல்லை தீயணைப்பு துணை இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனைநெல்லை: நெல்லை மண்டல தீயணைப்பு துணை இயக்குநர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.

தீயணைப்பு துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை திடீர் சோதனை லட்சக்கணக்கில் சிக்கிய பணம் அதிகாரிகள் அதிர்ச்சி

சோதனைக்கிடையில், தீயணைப்பு துணை இயக்குநர் சரவணபாபு, தீயணைப்பு வீரர் செந்தில் ஆகியோரிடமிருந்து கணக்கில் வராத பணம் ரூபாய் 2 லட்சத்து 61 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், சரவணபாபுவிடமிருந்து ரூ. 2 லட்சத்து 20 ஆயிரம், செந்திலிடமிருந்து ரூ. 41 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தையடுத்து, இருவரிடமும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் கண்காணிப்பாளர் எஸ்.கால் தலைமையில் போலீசார் இந்த சோதனையை மேற்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »