குறைந்த விலையில் கிடைக்கும் அசைவ உணவு முட்டை மட்டுமே ! இதுவும் மக்களுக்கு எட்டாத கனியாக கொண்டு செல்ல இருக்கிறார்கள் – நெல்லையில் தென் மாவட்ட முட்டை வியாபாரிகள் சங்க கூட்டத்தில் பகீர் தகவல்..

நெல்லை மாநகர் பாளையங்கோட்டை தனியார் மஹாலில் தென் மாவட்ட முட்டை வியாபாரிகள்சங்கம் சார்பாக ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. முட்டைகள் பதுக்கப்படுவது, அதனால் ஏற்படும் விலை உயர்வு குறித்து கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து தென் மாவட்ட முட்டை வியாபாரிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் செல்லபாண்டி செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது…

நாமக்கல்லில் முட்டை விலை ரூ.6.5 பைசா என விலையேற்றம் காரணமாக இங்கு நெல்லையில் மொத்த வியாபாரிகளுக்கு 6 ரூபாய் 30 காசு என கொடுக்கிறோம். வியாபாரிகள் இங்கு 7 ரூபாய், 7. 50 என விற்பனை செய்கிறார்கள்.

விரைவில் முட்டை விலை எட்டு ரூபாய் என்றாகி விடும். போன மாசம் முட்டை விலை 5 ரூபாய். இந்த மாசம் அதே முட்டை விலை 6 ரூபாய் ! ஒரே மாதத்தில் உற்பத்தி விலை கூடுவதற்கு காரணம் என்ன ? இதை கேட்டால் பண்ணைகாரர்கள் காரணம் கூற மறுக்கிறார்கள் ! முட்டை விலையில் அரசு தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும். வரும் காலங்களில் முட்டை விலை இன்னும் உயர வாய்ப்புள்ளது. ஒரே மாதத்தில் ஒரு ரூபாய் முட்டை விலை கூடுவதற்கு என்ன காரணம் ? இதை முட்டை பண்ணைக்காரர்கள் தான் விளக்க வேண்டும். தற்போது முட்டை சேகரிக்கும் மையங்கள் நாமக்கல்லில் அதிகம் வந்துவிட்டது. இதனால் முட்டைகளை பதுக்கும் சூழல் வந்து விட்டது. முட்டைக்கான டிமாண்ட் இருக்கும் போது எதற்காக ஏற்றுமதி செய்கிறார்கள் ? இதற்காக துறை சார்ந்த அதிகாரிகளும், அமைச்சரும் நேரில் வந்து விசாரணை செய்து சரியான தீர்வு மக்களுக்கு கொடுக்க வேண்டும்.
மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் அசைவ உணவு முட்டை மட்டுமே ! இதுவும் மக்களுக்கு எட்டாத கனியாக கொண்டு செல்ல இருக்கிறார்கள் ! மூலப் பொருள் என்று ஒன்று இல்லை ! ஆனால் விலை உயர்வுக்கு காரணம் முட்டை பதுக்கப்படுவது தான் ! முட்டைக்கான தேவையை demand ஐ உருவாக்குவதும் பண்ணையாளர்கள்தான். கடந்த 200 வருடங்களில் முட்டை விலை இப்போது தான் உச்சத்தை தொட்டுள்ளது. எதற்காக முட்டை விலை கூட்டப்பட வேண்டும் ? கடந்த மாதத்திற்கும், இந்த மாதத்திற்கும் விலை உயர காரணம் என்ன ? இன்னும் இரண்டு வாரத்தில் முட்டை விலை எட்டு ரூபாய் சென்று விடும். இது எல்லோருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

உணவகம் நடத்துபவர்கள் ஆம்லெட் விலை ₹20 ரூபாயில் இருந்து 25 ரூபாய், 30 ரூபாய் என கூட்ட வேண்டிய சூழல் ஏற்படும். நகரத்தில் எட்டு ரூபாய் என்பது, கிராம பகுதியில் ஒன்பது ரூபாய் என விலை எறிவிடும் ! Necc தான் முட்டை விலை நிர்ணயம் செய்கிறார்கள். தமிழகத்தில் முட்டை டிமாண்ட் எனும்போது, எதற்காக வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் ? முட்டை விலை உயர்வை, ஏற்றுமதிக்கான சூழலை கண்காணிக்க வேண்டியது Necc தான் என தெரிவித்தார்.






