நெல்லை நவம்பர் 18 ; நாளை கோவை வரும் பிரதமரை சந்திப்பீர்களா ? என்ற கேள்விக்கு, “அது சஸ்பென்ஸ்” என பதிலில் மர்மம் வைத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ! ஒருவேளை இருக்குமோ !!
திருநெல்வேலி:
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 89ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலியில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

வ.உ.சிதம்பரனார் பற்றிப் பேசிய அவர், “உலக அதிசக்தியாக இருந்த ஆங்கிலேயருக்கு எதிராக பொருளாதார ரீதியில் போராடிய வீரர் வ.உ.சி. அவர்கள். தனது சொத்துக்களையே விற்று, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பங்குதாரர்களை இணைத்து சுதேசி கப்பல் சேவையைத் தொடங்கி வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதியவர். தமிழரின் பெருமை அவர். அவரது புகழை உயர்த்த மணிமண்டபம் கட்டிய புரட்சித் தலைவி ஜெயலலிதாவிற்கும் நன்றி” என்றார்.

பிரதமரைச் சந்திப்பாரா? — “அது சஸ்பென்ஸ்!”
பின்னர் செய்தியாளர்கள், “நாளை (நவம்பர் 19) கோயம்புத்தூருக்கு பிரதமர் வருகிறார். அவரை நீங்கள் சந்திப்பீர்களா?” என்று கேட்டனர்.
இக்கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்காமல், செங்கோட்டையன் “அது சஸ்பென்ஸ்!” எனச் சொல்லிவிட்டு திடீரென வெளியேறினார்.

முன்னாள் அமைச்சரின் இந்த மர்மமான பதிலும், தேவர் ஜெயந்தி மற்றும் வ.உ.சி. குருபூஜை போன்ற அரசியல் நிகழ்வுகளில் அவர் தொடர்ந்து அளித்து வரும் பங்கேற்பும், அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி கோயம்புத்தூர் வருகையும், அதிமுகவில் முக்கிய நிலை வகிக்கும் செங்கோட்டையனின் ‘சஸ்பென்ஸ்’ பதிலும், தமிழக அரசியல் சூழலில் அடுத்த கட்ட மாற்றங்களைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.







