வரலாற்று சிறப்புமிக்க திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாளுக்கு திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த நான்காம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது 12 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் இன்றைய தினம் விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவிற்காக பல்வேறு வண்ண மலர்களால் கோவில் ஆயிரம் கால் மண்டபம் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது

தொடர்ந்து காந்திமதி அம்பாள் மனக்கோளத்தில் சிறப்பு அலங்காரத்தில் மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் சுவாமி நெல்லையப்பர் தங்க பல்லக்கில் சுவாமி சன்னதியில் இருந்து மேளதாளம் முழங்க ஆயிரங்கால் மண்டபம் எழுந்தருள அங்கு நெல்லை கோவிந்தர் மாப்பிள்ளை அழைப்பு சடங்குகளை செய்து ஆயிரங்கால் மண்டபத்திற்கு சுவாமியை அழைத்து வந்தார்.

தொடர்ந்து சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கு மாலை மாற்றும் வைபவமுன் அதனை தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கல்யாணமும் விமர்சையாக நடைபெற்றது. பின்னர் சுவாடச உபச்சார மகா தீபாராதனை நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் திருமண விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கோவில் வளாகத்தில் திருமண விருந்து அளிக்கப்பட்டது.







